விஜே சித்ராவின் ‘கால்ஸ்’ பட டீசர் வெளியீடு. முதல் படமே… கடைசிபடமானது… ரசிகர்கள் உருக்கம்

விஜே சித்ராவின்     ‘கால்ஸ்’ பட டீசர் வெளியீடு. முதல் படமே… கடைசிபடமானது…  ரசிகர்கள் உருக்கம்

விஜே சித்ராவின்     'கால்ஸ்' பட டீசர் வெளியீடு. முதல் படமே... கடைசிபடமானது...  ரசிகர்கள் உருக்கம்

தற்கொலை செய்து கொண்ட பிரபல சின்னத்திரை நடிகை விஜே சித்ராவின் ‘கால்ஸ்’ பட டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

விஜய் டிவியில் பிரபல சீரியல் தொடரான பாண்டியன் ஸ்டோர் மூலம் புகழ்பெற்றவர் விஜே சித்ரா. சென்னை அருகே நசரத்பேட்டை தனியார் திரைப்பட நகரில் நடைபெற்ற தொலைக்காட்சித் தொடர் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வந்தார் நடிகை சித்ரா. படப்பிடிப்புதளம் அருகே தனியார் ஹோட்டல் ஒன்றில் தனது கணவர் ஹோம்நாத்துடன் தங்கி இருந்தார்.

விஜே சித்ராவின்     ‘கால்ஸ்’ பட டீசர் வெளியீடு. முதல் படமே… கடைசிபடமானது…  ரசிகர்கள் உருக்கம்

கடந்த மாதம் 15ம் தேதி படப்பிடிப்பு முடிந்து நள்ளிரவு ஹோட்டல் அறைக்கு வந்த சித்ரா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சித்ரா, கால்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இது அவருக்கு முதல் படம். அவர் நடித்த முதல் படமே அவருக்கு கடைசி படமாகவும் அமைந்துவிட்டது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

விஜே சித்ராவின்     ‘கால்ஸ்’ பட டீசர் வெளியீடு. முதல் படமே… கடைசிபடமானது…  ரசிகர்கள் உருக்கம்

இந்த படத்தை சபரீஷ் இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து சித்ரா ரசிகர்கள் சிலர் உருக்கமான பதிவுகளை கமென்ட் பகுதியில் வெளியிட்டுள்ளனர்.

Share this story