பிரஜின் போலீசாக மிரட்டும் 'D3'... டீசர் வெளியீடு !

d3

 பிரஜின் போலீசாக மிரட்டும் 'D3' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 

அறிமுக இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'D3'. இந்த படத்தில் பிரபல சீரியல் நடிகையான பிரஜின் கதாநாயகனாக நடித்து வருகிறார்.  இந்த படத்தில் வித்யா பிரதீப் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர்கள் சார்லி, வர்கீஸ் மேத்யூ, மோகமுள் அபிஷேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

d3

பீமாஸ்எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஜேகேஎம் புரொடக்ஷ்ன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ள இப்படத்தை  ஸ்ரீஜித் எடவானா என்பவர் இசையமைத்து வருகிறார். ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களை வைத்து இப்படம் உருவாகி வருகிறது. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

d3

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரில் மாஸான போலீசாக பிரஜின் நடித்துள்ளார். இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story