60 கோடி பண்ணை வீடு, 8 கோடி ரோல்ஸ் ராய்ஸ்… நிஜ வாழ்க்கையிலும் பிரம்மாண்டம் காண்பிக்கும் பிரபாஸ்!

60 கோடி பண்ணை வீடு, 8 கோடி ரோல்ஸ் ராய்ஸ்… நிஜ வாழ்க்கையிலும் பிரம்மாண்டம் காண்பிக்கும் பிரபாஸ்!

பிரபாஸ் தற்போது இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருக்கிறார்.

ஐந்து ஆண்டுகளாக வேறு எந்தப் படத்திலும் நடிக்காமல் பாஹுபலி படத்திற்காக பிரபாஸ் அடைந்த கஷ்டம் வீண்போகவில்லை. பாஹுபலி படம் பிரபாஸை இந்தியாவின் மூலை எங்கும் கொண்டு சென்றது. சொல்லப்போனால் பீவெளிநாடுகளில் கூட பிரபாஸுக்கு பல தீவிர ரசிகர்கள் உருவாகிவிட்டனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியுள்ள பிரபாஸ் தற்போது இந்தியா முழுவதும் வெளியாகுமாறு பிரம்மாண்ட படங்களை எடுத்து வருகிறார்.

60 கோடி பண்ணை வீடு, 8 கோடி ரோல்ஸ் ராய்ஸ்… நிஜ வாழ்க்கையிலும் பிரம்மாண்டம் காண்பிக்கும் பிரபாஸ்!

இதுவரை தான் நடிக்க கமிட் ஆகியுள்ள படங்களில் 400 கோடி வரை சம்பளம் பேசியுள்ளாராம் பிரபாஸ். மேலும் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் இதுவரை இல்லாத பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட உள்ளது.

படங்களில் காண்பிக்கும் பிரம்மாண்டம் போலவே நிஜ வாழ்விலும் பிரபாஸ் பிரம்மாண்ட வாழ்க்கையைத் தான் வாழ்ந்து வருகிறாராம்.

ஹைதராபாத்தில் பிரபாஸுக்குச் சொந்தமான சொத்துக்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ஒரு ஸ்வாங்கி ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம்

பிரபாஸ் ஆடம்பரமான கார்களின் மிகப்பெரிய ரசிகர் என்று தெரிவிக்கப்படுகிறது. 2015- ல், அமிதாப் பச்சன், ஷாருக் கான், அக்‌ஷய் குமார் மற்றும் பலரின் வரிசையில் ரூ .8 கோடி மதிப்புள்ள ஸ்வாங்கி ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் காரை வாங்கினார்.

60 கோடி பண்ணை வீடு, 8 கோடி ரோல்ஸ் ராய்ஸ்… நிஜ வாழ்க்கையிலும் பிரம்மாண்டம் காண்பிக்கும் பிரபாஸ்!

ரிட்ஸி பிஎம்டபிள்யூ எக்ஸ் 3

68 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ எக்ஸ் 3 கார் வைத்துள்ளார்.

ஜாகுவார் எக்ஸ்ஜேஆர்

2 கோடி விலை கொண்ட உயர்ரக ஜாகுவார் எக்ஸ்.ஜே.ஆர் கார் ஒன்றையும்வைத்திருக்கிறார்.

ஹைதராபாத்தின் ஜூபிலி ஹில்ஸில் 60 கோடி ஆடம்பரமான பண்ணை வீட்டையும் பிரபாஸ் வைத்திருக்கிறார். அந்த பண்ணை வீட்டில் பெரிய தோட்டம், நீச்சல் குளம், ஜிம் மற்றும் விளையாட்டு பகுதி ஆகியவை உள்ளன.

60 கோடி பண்ணை வீடு, 8 கோடி ரோல்ஸ் ராய்ஸ்… நிஜ வாழ்க்கையிலும் பிரம்மாண்டம் காண்பிக்கும் பிரபாஸ்!

விலையுயர்ந்த உடற்பயிற்சி உபகரணங்கள்

பாகுபலி படக்குழு பிரபாஸுக்கு 1.5 கோடி மதிப்புள்ள ஜிம் கருவிகளை பரிசாக வழங்கியுள்ளனர். அந்த உபகரணங்கள் அனைத்தையும் பிரபாஸ் தனது வீட்டில் வைத்திருக்கிறாராம்.

இவ்வாறு படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் ராஜாவாக வாழ்ந்து வருகிறார் பிரபாஸ்.

Share this story