Saturday, March 6, 2021

Movie Stills

ஐந்து படங்களுமே மொக்கையா? அப்படி என்னதான் செய்திருக்கிறார்கள் 5 ஜாம்பவான்கள்?

மிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களான ராஜீவ்மேனன், சுகாசினி மணிரத்னம், கவுதவ் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ், சுதா கொங்கரா ஆகிய 5 பேரும் தனித்தனியாக இயக்கிய குறும்படங்களை ‘புத்தம் புது காலை’ என்ற டைட்டிலில் ஒரே சினிமாவாக தந்திருக்கிறது அமேசான்பிரைம்.

இன்று வெளியாகி இருக்கும் இந்தப் படங்களைப்பற்றி கலைவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு சிலர், ஐந்து படங்களுமே அதர பழசு; செம மொக்கை என்றும் விமர்சித்து வருகிறார்கள்.

மணிரத்னம் படம் மாதிரி தர முயற்சித்திருக்கிறார் சுகாசினி. அவரோட ‘காஃபி எனி ஒன்’ படம் அவ்வளவாக நேச்சுரலாக இல்லாவிட்டாலும் அனுஹாசன் அசத்தல் ஸ்ருதிஹாசன் சொதப்பல் என்கிறார்கள் நெட்டிசன்கள். பேச்சு மூச்சு இல்லாமல் மருத்துவமனையில் இருக்கும் தன் மனைவியை மகள்களின் எதிர்ப்பையும் மீறி வீட்டுக்கு அழைத்து வந்து வீட்டுக்கு அழைத்து வந்து அன்பினால் குணப்படுத்த முயற்சிக்கும் கணவனின் கதை. இது வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தை நினைவுபடுத்துவதாக சொல்கிறார்கள்.

ராஜீவ்மேனனின் ‘ரீ யூனியன்’ஓகேதான் என்று சிலர்தான் சொல்கிறார்கள். பலரும் ஐந்து படங்களிலில் இதுதான் படு சொதப்பல் என்றே சொல்கிறார்கள். ஆண்ட்ரியா வரும் சீன்கள் எல்லாம் கொஞ்சம் நல்லாயிருக்குது என்கிறார்கள். கொரோனா காலத்தில் பள்ளித்தோழனின் வீட்டில் வந்து தங்குகிறார். ஊரடங்கில் வீட்டிற்குள் இருக்கும் தோழிக்கு போதைப்பழக்கம் இருப்பது தெரியவருகிறது. இதை தெரிந்துகொண்ட தோழன் அப்பழக்கத்தில் இருந்து தோழியை மீட்டெடுக்க நினைக்கும் கதை. இயக்கத்தில் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டிருக்கலாம் என்றே விமர்சிக்கிறார்கள்.

‘அவளும் நானும்’என்று வேறு ஒரு தளத்தில் புகுந்து விளையாடிருக்கிறார் கவுதம் வாசுதேம் மேனன். காதல் கல்யாணம் செய்துகொண்ட தன் பெற்றோரை ஒதுக்கிவைத்த தாத்தாவுக்கும் பேத்திக்கும் இடையிலான உறவை சொல்கிறது இந்த படம். பெற்றோரை ஏன் ஏற்கவில்லை என்று எம்.எஸ்.பாஸ்கரிடம் கேட்கும்போது, அதற்கு அவர் சொல்லும் பதில்தான் படத்தோட ட்விஸ்ட். ஆனாலும், படம் படு மொக்கை என்ற விமர்சனத்தையும் சில முன்வைக்கிறார்கள்.

சுதா கொங்கராவின் ‘இளைமை இதோ இதோ’வில் ஜெயராம், ஊர்வசி, காளிதாஸ், காளிதாஸ், கல்யாண்பிரியதர்ஷன்னு எல்லோருமே கைத்தட்டல் வாங்குறாங்க. மனைவியை இழந்துவிட்ட ஒரு ஆணுக்கும் கணவனை இழந்து நிற்கும் பெண்ணுக்கும் இடையில் மலரும் காதல்தான் கதை. இருவருக்கே டீன் ஏஜில் பிள்ளைகள் இருந்தாலும் இளம் காதல் ஜோடிகளைப் போலவே இவர்கள் நடந்துக்கொள்ளும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. இப்படத்திற்கு கொஞ்சம் பாஸிட்டிவ்வான விமர்சனங்கள் வருகின்றன.

கொரோனா, ஓசி புளியோதரை, குருஜி என தர லோக்கலில் இறக்கி அடிச்சிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். பாபி சிம்ஹா நடிப்பில் வந்திருக்கும் இந்த ‘மிராக்கில்’ கொரோனாவினால் பணம் இல்லாமல் ஒரு இயக்குநரின் படம் பாதியில் நின்றுவிடுகிறது. அதே நேரத்தில் ஒரு காரில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது இரண்டு பேருக்கு தெரியவருகிறது. யாருக்கு பணம் கிடைக்கிறது என்பதுதான் கதை. திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.

பொதுவாகவே ஐந்து ஜாம்பவான்களின் இந்த ஐந்து படங்களுமே அதர பழசு என்றும் செம மொக்கை என்றும் பலரும் சொல்லி வருகின்றனர்.

Latest Posts

Actress

TTN Cinema