அங்கேயும் சமரசம் ஆகாத நடிகர்: ரசிகர்களுக்கு ‘வடபோச்சே’

அங்கேயும் சமரசம் ஆகாத நடிகர்:  ரசிகர்களுக்கு  ‘வடபோச்சே’

உச்சத்துல இருக்கும்போதே எந்த நடிகரும் அந்த இடத்தை இதுவரையிலும் இழந்ததில்ல. இவரு ஒருத்தர தவிர. அனைத்துக் கட்சியினரும் இவருக்கு ரசிகராக இருக்குறப்ப, ஒரு கட்சிக்கு ஆதரவா போக வேண்டிய சூழலை அவரே உருவாக்கிக்கிட்டார். அந்த கட்சியிலயும் இப்ப அவர் இல்லேன்னாலும் தேசிய கட்சியில சேரப்போறார்னு ஒரே பேச்சா இருக்குது.

அங்கேயும் சமரசம் ஆகாத நடிகர்:  ரசிகர்களுக்கு  ‘வடபோச்சே’


ஆஸ்பிடலில் சீரியஸ் கண்டிஷனில் இருக்குறவங்க பலரும் தன்னோட சிரிப்பை பார்த்து குணமடையுறாங்கன்னு தெரிஞ்சிருந்தும், தான் ஒரு சிரிப்பு டாக்டர்னு புரிஞ்சிருந்தும் ஈகோங்குற ஒண்ணால எல்லாத்தையும் நாசமாக்கிட்டு போறார்.

வாய்ப்புகள் இல்லாமல் காணாமல் போவோரைத்தான் பார்த்திருக்கிறோம். வாய்ப்புகள் குவிந்து கிடக்கையில் ஓடி ஒழிந்துக்கொள்ளும் அதிசய நடிகராகிட்டார்.

அங்கேயும் சமரசம் ஆகாத நடிகர்:  ரசிகர்களுக்கு  ‘வடபோச்சே’

இவரோட சிரிப்பை எல்லாம் பார்த்துட்டு எத்தனையோ சண்டை சமாச்சாரம் எல்லாம் சமரசம் ஆகியிருக்குது. ஆனால், இந்த மனுசர் மட்டும் சமசரத்துக்கு போகாததால பிரம்மாண்டத்தோட படத்துல நடிக்குற விசயம் அப்படியே கிடப்புல கிடக்குது. இந்த ஒரு விசயத்தாலேயே சினிமா உலகமே அவருக்கு அன்னியமாகி இருக்குது.
இதனாலேயே வெப் சீரிஸ் பக்கம் தலைவச்சு படுத்தார்.

உடனே அமேசான், நெட்பிலிக்ஸ் எல்லாம் தேடி வந்து பேச்சு கொடுத்தது. சிரிப்புல தனக்கு நல்ல திருப்பத்தை கொடுத்த டைரக்டரோடு கை கோர்த்தார். சினிமாவுக்குன்னு ரெடி பண்ணுன ஸ்கிரிப்ட்டை அவரும் வெப் சீரிஸ்க்கு ஏத்த மாதிரி 9 எபிசோடாக பிரிச்சுட்டார். விகடமான படத்தை விகடமான நிறுவனமே தயாரிக்குறதுன்னும் முடிவாச்சு.

அங்கேயும் சமரசம் ஆகாத நடிகர்:  ரசிகர்களுக்கு  ‘வடபோச்சே’

மறுபடியும் ஒரு ரவுண்டு வரணுமுன்னு இது சம்பந்தமா டைரைக்டரும் அந்த நடிகரும் தினமும் ராத்திரி பல ரவுண்டு போட்டுக்கிட்டு டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு வந்திருக்காங்க.

சில தினங்களுக்கு முன்னால அப்படித்தான் டிஸ்கஷன்ல இருந்தப்ப, ரவுண்டு அதிகமாகி ரெண்டு தரப்புலயும் வார்த்தை தடிச்சிருக்குது. திடீர்னு எழுந்த நடிகர், ‘’இனிமே நடிக்கமாட்டேன்’’னு சத்தம் போட்டு சொல்லிட்டு கிளம்பிட்டாராம்.

அவரு போட்ட சத்தத்துல டைரக்டர் காதுக்குள்ள குருவி ரிங்குன்னு கத்தியிருக்குது. விசயம் தெரிஞ்ச உடனேயே, ’சோளமுத்தா போச்சா’ன்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க.

அங்கேயும் சமரசம் ஆகாத நடிகர்:  ரசிகர்களுக்கு  ‘வடபோச்சே’

சினிமாவுல இல்லேன்னாலும் வெப் சீரிஸிலாவது பார்த்து சிரிக்கலாமுன்னு இருந்த ரசிர்கர்களுக்கும், ‘வடபோச்சே’ன்னு ஆச்சு.

Share this story