‘’தீவைத்து கொளுத்துவோம்’’ -பாகுபலி டைரக்டரை மிரட்டும் பாஜக எம்.பி.

‘’தீவைத்து கொளுத்துவோம்’’ -பாகுபலி டைரக்டரை மிரட்டும்  பாஜக எம்.பி.

தீ வைத்து கொளுத்துவோம் என்று பாகுபலி டைரக்டர் ராஜமவுலிக்கு பாஜக எம்.பி. சோயம் பாபுராவ் விடுத்திருக்கும் மிரட்டலால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

‘’தீவைத்து கொளுத்துவோம்’’ -பாகுபலி டைரக்டரை மிரட்டும்  பாஜக எம்.பி.

பாகுபலி படத்திற்கு பின்னர், ‘ஆர்.ஆர்.ஆர்.’என்ற படத்தை இயக்கி வருகின்றார் ராஜமவுலி. ஆந்திராவின் இரு புரட்சியாளர்களின் வாழ்க்கையினை மையமாகக்கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில், ஜூனியர் என்.டி.ஆரும், ராம் சரணும் நடித்து வருகிறார்கள்.

கொமரம் பீம் -ஆக ஜூனியர் என்.டி.ஆரும், அல்லூரி சீதாராம ராஜூவாக ராம் சரணும் நடித்து வரும் இப்படத்தில், ஜூனியர் என்.டி.ஆர் கேரக்டர் வீடியோ அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

‘’தீவைத்து கொளுத்துவோம்’’ -பாகுபலி டைரக்டரை மிரட்டும்  பாஜக எம்.பி.
‘’தீவைத்து கொளுத்துவோம்’’ -பாகுபலி டைரக்டரை மிரட்டும்  பாஜக எம்.பி.
‘’தீவைத்து கொளுத்துவோம்’’ -பாகுபலி டைரக்டரை மிரட்டும்  பாஜக எம்.பி.

பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடிய கொமரம் பீம், நில பிரபுக்களையும், நிஜாம் ஆட்சியாளர்களையும் எதிர்த்து கொரில்லா முறையில் போர் தொடுத்தவர். ஆனால், இஸ்லாமியர் போல் ஜூனியர் என்.டி.ஆர். குல்லா அணிந்திருப்பதால் சர்ச்சை வெடித்திருக்கிறது. இதற்கு பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கொமரம் பீமின் பேரனும் இதுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, அந்த காட்சியை நீக்கவும் வலியுறுத்தி இருக்கிறார்.

‘’தீவைத்து கொளுத்துவோம்’’ -பாகுபலி டைரக்டரை மிரட்டும்  பாஜக எம்.பி.
‘’தீவைத்து கொளுத்துவோம்’’ -பாகுபலி டைரக்டரை மிரட்டும்  பாஜக எம்.பி.

கொமரம் பீம் கேரக்டர் தவறாக சித்தரிக்கப்படுவதாக எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், பாஜக எம்.பி. சோயம் பாபுராவ், இது தொடர்பாக படத்தின் டைரக்டர் ராஜமவுலிக்கு பகிரங்க மிரட்டல் விடுத்திருக்கிறார். அந்த காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும். அப்படி நீக்காவிட்டால் இப்படம் வெளியாகும் தியேட்டர்களை தீ வைத்து கொளுத்துவோம் என்று மிரட்டல் விடுத்திருப்பதால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this story