சூப்பர் நடிகர் மேல உள்ள காண்டுல… டைரக்டர போட்டு கொத்தும் புரடியூசர்

சூப்பர் நடிகர் மேல உள்ள காண்டுல… டைரக்டர போட்டு  கொத்தும் புரடியூசர்

அவரும் தன்னோட ரெண்டாவது படத்துல இருந்தே அந்த நடிகர டைரக்ட் பண்ணுறதா சொல்லிக்கிட்டே வர்றார். ஆனா, இப்ப வரைக்கும் அது நடந்த பாடுதான் இல்ல. இடையில, பத்து என்றதுக்குள்ள அவரை வச்சு ஒரு படமும் புரடியூஸ் பண்ணிட்டார். ரீமேக் ரவுண்ட் -அப்’பை எல்லாம் முடிச்சிக்கிட்டு வந்ததும், அந்த நடிகருக்கு ஒரு வழியா ஒரு படத்த பண்ணலாமுன்னு உட்கார்ந்தார்.

100 கோடி பட்ஜெட். அதுல டைரக்டருக்கு 25 கோடி, நடிகருக்கு 25 கோடி போக மிச்சமிருக்குற 50 கோடியில படத்த எடுக்குறதுன்னு முடிவாச்சு. அந்த நேரம் பார்த்து சூப்பர் நடிகர் கதை கேட்க, அந்த நடிகருக்காக வச்சிருந்த கதையை அவருக்கு சொல்லி ஓகே பண்ணிட்டார். இவரா அவரான்னு பார்க்குறப்ப சூப்பர் நடிகர்தான் பெஸ்ட்டுன்னு முடிவு பண்ணினதுக்கு அப்புறம், இந்த டீமை எப்படி கழற்றி விடுறதுன்னு யோசிச்ச டைரக்டர், என்னோட அசிஸ்ட்டெண்ட் நல்லா பண்ணுவான். அவன் நல்ல கதை வச்சிருக்கான். அவனை வச்சு பண்ணுறீங்களான்னு கேட்க, புரடியூசரும் நடிகருக்கும் ஒரு மாதிரி ஆச்சு.

சூப்பர் நடிகர் மேல உள்ள காண்டுல… டைரக்டர போட்டு  கொத்தும் புரடியூசர்

அப்புறமா, அவரோட அசிஸ்டெண்ட் பண்ணுறாருன்னா அதுக்கு ஒரு மார்க்கெட் இருக்குது. அவரும் ரெண்டு படத்தை டைரக்ட் பண்ணிட்டாரு. வர்த்தக ரீதியாகவும், டெக்னிக்கலாகவும் பேசப்படுதேன்னு யோசிச்சு ஓகேன்னு சொல்லிட்டாங்க. அவுங்க ஓகே சொன்னதுக்கு அதுமட்டும் காரணமில்ல. அவனுக்கு அஞ்சு கோடி கொடுத்தா போதும்னு சொன்னதும், இவருக்கு 25 கோடி பேசியிருந்தோம். கதையும் நல்ல கதைன்னு சொல்லுறாரு. அப்புறம் என்ன, பட்ஜெட்டுல 20 கோடி மிச்சமாகுதேன்னு கணக்கு போட்ட புரடியூசர் ஹேப்பி.

நல்ல கதை வச்சிருக்கான்னு டைரக்டர் சொன்னதே ஒரு ‘கதை’தான். சிஷ்யரை கூப்பிட்டு விசயத்தை சொல்லவும், சார்.. எந்த கதையும் இப்ப என்கிட்ட ரெடியா இல்லையேன்னு சொல்ல, நீ அன்னைக்கு சொன்னியேன்னு கேட்க, அது வெறும் ஒன்லைன் ஸ்டோரிதான் சார் என்று சொல்ல, அதுக்கென்ன டெவலப் பண்ணிட்டா போச்சுன்னு அசால்ட்டா சொல்லிட்டாராம்.

சூப்பர் நடிகர் மேல உள்ள காண்டுல... டைரக்டர போட்டு  கொத்தும் புரடியூசர்
சூப்பர் நடிகர் மேல உள்ள காண்டுல… டைரக்டர போட்டு  கொத்தும் புரடியூசர்

நல்ல கதை வச்சிருக்கான்னு சொல்லிட்டதால, அவசர அவசரமா உட்கார்ந்து நாலு நாளுல ஒரு கதையை ரெடி பண்ணி புரடியூசர் கிட்ட அனுப்பிட்டார் சிஷ்யரை.

படத்தோட டாக் நல்லாத்தா இருக்கு. பல கேடரக்டருல வந்து மிரட்டப்போறார்னு அந்த படத்தை பத்தி இண்டஸ்ட்ரி பூரா பேச்சு இருக்குது. ஆனா, படத்துக்கு வச்ச டைட்டில் மாதிரியே புரடியூசர் படமெடுத்து ஆடிக்கிட்டு இருக்காரு.


குருநாதர் அந்த படத்தை ஆரம்பிச்சு அது ரிலீசும் ஆகி ரொம்ப நாளாச்சு. ஆனால், சிஸ்யபிள்ளை இன்னமும் அந்த படத்தை முடிக்காக போட்டு ஜவ்வா இழுத்தடிச்சிக்கிட்டு இருக்கார். நல்ல நடிகர்தான் நல்லா நடிக்கிறார்னு ஒரு சின்ன ஷாட்டுக்கு நாலு நாளு ஷூட்டிங் வச்சி புரடியூசர போட்டு தாளிச்சா அவரும் என்னதான் பண்ணுவார். குருநாதர் வெளியே போனா என்ன சிஷ்யர் உள்ளே வர்றதால 20 கோடி மிச்சமுன்னு நினைச்சா, இப்படி லேட் ஆக ஆக 20 கோடிக்கும் மேல செலவ ஏத்தி வச்சிட்டாரேங்குற செம கோபம் புரடியூசருக்கு.

சூப்பர் நடிகர் மேல உள்ள காண்டுல... டைரக்டர போட்டு  கொத்தும் புரடியூசர்
சூப்பர் நடிகர் மேல உள்ள காண்டுல… டைரக்டர போட்டு  கொத்தும் புரடியூசர்

விளையாட்டு வீரரையும் படத்துக்குள்ள இழுத்துப்போட்டுக்கிட்டாலும், குறித்து நேரத்துல படத்த முடுக்கணும்ங்கிற சீரியஸ் இல்லாம விளையாட்டு பசங்க மாதிரியே இருக்குறாராம். இத்தனை நாளைக்கு அப்புறம் இப்பத்தான் படத்தோட டப்பிங் வேலை ஆரம்பிச்சிருக்குது. ‘அப்பாடா’ படம் முடிஞ்சிடுச்சுன்னு பெருமூச்சு விட்ட புரடியூசருகிட்ட, இன்னும் 15 நாள் ஷூட்டிங் மிச்சமிருக்குன்னு சொன்னதால , ஷாக் அடிச்ச மாதிரி ஆகிட்டாராம்.

அந்த நேரத்துல அவரு குறுக்கே வந்ததாலதான் இவரு வந்தார். இல்லேன்னா அவரே டைரக்ட் பண்ணியிருப்பார். எப்பவே ரிலீசாகி இருக்குமேன்னு , சூப்பர் நடிகர் மேல செம காண்டுல இருக்குறாராம் புரடியூசர்.

அவரு மேல உள்ள அந்த காண்டுல, இவருகிட்ட(டைரக்டர்) படமெடுத்து கொத்து கொத்துன்னு கொத்துராறாம் புரடியூசர். இவரு(புரடியூசர்) மேல உள்ள காண்டுல பட யூனிட் ஆட்கள் கிட்ட படமெடுத்து, போட்டு கொத்து கொத்துன்னு கொத்துறாராம் டைரக்டர்.

படத்துல நடிகர் நல்லா படமெடுத்து ஆடியிருந்தா சரி.

Share this story