அனுராக் காஷ்யப், டாப்ஸி அலுவலகங்களில் நடந்த வருமான வரிச் சோதனை… 650 கோடி சிக்கியது!?
பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகை டாப்ஸி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் நடத்திய வருமான வரிச் சோதனையில் கிட்டத்தட்ட 650 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
அனுராக் காஷ்யப் மற்றும் டாப்ஸி பன்னு ஆகியோரின் சொத்துக்கள் மீது வருமான வரித்துறையினர் கடந்த புதன்கிழமை சோதனை நடத்தினர். அடுத்த நாள் அவர்கள் சொத்தில் பல்வேறு மோசடிகள் கண்டுபிடித்தாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரப்பூர்வ அறிக்கையில் எந்த பெயரையும் வெளியிடவில்லை.
வருமான வரித் துறையின் கூற்றுப்படி, அனுராக் காஷ்யப், அவரது பங்குதாரர்கள் மற்றும் நடிகை டாப்ஸி ஆகியோருடன் தொடர்புடைய 30 இடங்களில் அவர்கள் சோதனை செய்தபோது போலியான கணக்குகள் மற்றும் வரி ஏய்ப்பு செய்திருப்பதை கண்டறிந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
அனுராக் காஷ்யப்பின் பழைய தயாரிப்பு நிறுவனமான பாண்டம் பிலிம்ஸ் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் கிட்டத்தட்ட 300 கோடி வரையிலான பணத்திற்கு அவர்களிடம் சரியான கணக்கு விவரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
பாண்டம் பிலிம்ஸ், அதன் பங்குதாரர்கள் மற்றும் பங்குதாரர்களின் பரிவர்த்தனைகளை கையாளுவார்கள் தொடர்பான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், 350 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகவும் வருமான வரிச் சோதனையின் தெரிவித்துள்ளனர். நடிகைக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத ஆவணங்களையும் கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளனர்.