ரயில் நடிகை செஞ்ச வேலை; கதறுது கோடம்பாக்கம்

ரயில் நடிகை செஞ்ச வேலை; கதறுது கோடம்பாக்கம்

உறவுமுறைகளில் அந்த உறவைச்சொன்னாலே ‘கொடுமை’னு சொல்லுறாங்க. தாய்க்கு அடுத்த ஸ்தானத்துல வர்ற உறவாக இருந்தாலும் யாரும் அந்த உறவை அன்பு, பாசம்னு சொல்லுறது இல்ல. அந்த அளவுக்கு அந்த உறவைப்பத்தின அபிப்ராயம் ஏற்படுகிற அளவுக்குத்தான் நிறைய சம்பவங்களும் நடந்திருக்குது. இத வச்சுத்தான் முருங்கக்காய் டைரக்டரும் ரெண்டு படத்தை எடுத்திருந்தாரு.

ரயில் நடிகை செஞ்ச வேலை; கதறுது கோடம்பாக்கம்
ரயில் நடிகை செஞ்ச வேலை; கதறுது கோடம்பாக்கம்

அம்மான்னு சொன்னா எப்படி நினைக்கத்தோணுதோ அப்படித்தான் அந்த உறவைச்சொன்னாலும் நினைக்கணும். அதுக்கு தன்னோட சீரியல் ஒரு முன்னுதாரணமாக இருக்கணும்னு நினைச்சுத்தான் அந்த சீரியலை ஆரம்பிச்சார் ரயில் நடிகை. தானே அந்த கேரக்டர்ல நடிச்சார். 18 வருசத்துக்கு முன்னாடி ராத்திரி 9 மணி ஆச்சுன்னா போதும் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டுலயும் இந்த சீரியல்தான். பொழுது விடிஞ்சா பொதுழு போனா இந்த சீரியல் பத்தின பேச்சுதான் பெரும்பாலான வீடுகளில் இருக்கும்.
தான் நினைச்சது மாதிரியே அந்த கேரக்டருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க செஞ்சுட்டார்.

ஆனா, அந்த நடிகையோட கேரக்டர்தான் இப்ப மாறிப்போச்சு. இப்பவும் அந்த சீரியலோட 2ம் பாகம் போய்க்கிட்டிருக்குது. லாக்டவுன் காலங்களுக்கு பிறகு மீண்டும் ஷூட்டிங் தொடங்கியிருக்குது. OMRல் ஷீட்டிங் நடக்குது. காலையில 7 மணிக்கு ஷீட்டிங். ஈவ்னிங் 9 மணிக்கு ஷூட்டிங் முடியுது.

வழக்கமாக ஷீட்டிங்குக்கு வரும் ஆர்ட்டிஸ்டுகள், டெக்னிஷீயன்களை எல்லாம் அவரவர தகுதிக்கு ஏற்ப கார், வேன் வைத்து அழைத்துச் சென்று திரும்பவும் கொண்டு வந்து விடுவார்கள். சினிமாவிலும் இப்படித்தான் சீரியலிலும் இப்படித்தான். அதனாலதான் ஷூட்டிங் நாட்களில் சாதாரண ஆட்களும் ராஜாவாக இருப்பாங்க. மத்த நாட்களில் நடராஜாதான்.

ரயில் நடிகை செஞ்ச வேலை; கதறுது கோடம்பாக்கம்
ரயில் நடிகை செஞ்ச வேலை; கதறுது கோடம்பாக்கம்

சொந்த காரில் வரும் ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன்களுக்கு பெட்ரோல், டீசலுக்கான பணத்தை கொடுத்துவிடும் தயாரிப்பு நிறுவனம். டிரைவருக்கு தனியாக பேட்டா கொடுத்துவிடும்.

இப்படியிருக்க, ரயில் நடிகைக்கு திடீர்னு என்ன ஆச்சோ தெரியல. திடீர்னு கார், வேன் ஏற்பாடு செஞ்சு கொடுக்காம. எப்படியாவது வந்துடுங்கன்னு சொல்லிட்டாராம். ரயில் இல்லாம சென்னை மக்கள் ஒருபக்கம் அல்லாடுறாங்கன்னா, ரயில் நடிகை செஞ்ச வேலையால கோடம்பாக்கவாசிகள் அல்லாடுறாங்க.

சொந்த கார் வச்சிருக்குறவங்களுக்கு ஒண்ணும் பிரச்சனையில்ல. டூவீலருக்கு கூட வழி இல்லாம இருக்குறவங்களுக்குத்தான் சிக்கல். கோடம்பாக்கத்துல இருந்து அவ்வளவு தூரத்துக்கு காலை 7 மணிக்குள்ள போறதுக்கு பெரும்பாடாக இருக்குதுன்னா, அதவிட ஷூட்டிங் முடிச்சுட்டு திரும்ப வர்றதுக்குள்ள நாக்கு தள்ளுது.

ரயில் நடிகை செஞ்ச வேலை; கதறுது கோடம்பாக்கம்
ரயில் நடிகை செஞ்ச வேலை; கதறுது கோடம்பாக்கம்

லாக்டவுன் காலங்குறதால முன்ன மாதிரி இப்ப எந்நேரமும் பஸ் வசதியும் இல்ல. இதனால, சின்னச்சின்ன ஆர்ட்டிஸ்டுகளும், டெக்னீஷியன்களும் அல்லாடுறாங்க.

லாக்டவுன் காலத்துல வேலை இல்லாம அல்லாடிக்கிட்டு இருந்தவங்க, லாக்டவுன் தளர்வு வந்து ஷூட்டிங் ஆரம்பிச்சும் அந்த நடிகை செஞ்ச வேலையால ஷூட்டிங்குக்கு போக முடியாம அல்லாடுறாங்க.

Share this story