விஜய் -65 .. டைரக்டர் : நெல்சன், கதை: ப்ரண்ட்ஸ்

விஜய் -65 .. டைரக்டர் : நெல்சன், கதை: ப்ரண்ட்ஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் டிராப் ஆகிவிட்டது என்பது கன்பார்ம் ஆகியிருக்கிறது. விஜய்-65க்குள் நெல்சன் திலீப்குமார் வந்திருக்கிறார். கோலமாவு கோகிலா படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி வரும் நெல்சன் சொன்ன ப்ரண்ட்ஸ் சப்ஜெக்ட் கதை விஜய்க்கு பிடித்துவிட்டதால் அதையே தனது அடுத்த படமாக செய்துவிட முடிவெடுத்திட்டாராம்.

விஜய் -65 .. டைரக்டர் : நெல்சன், கதை: ப்ரண்ட்ஸ்

க்ளைமாக்ஸில் சில மாற்றங்கள் செய்யச்சொல்லி, அதையும் சீக்கிரத்திலேயே முடிக்கச்சொல்லி இருக்கிறாராம் விஜய்.

டாக்டர் படத்துக்கு ரசிகர்களிடையே ஒருவித எதிர்பார்ப்பு இருந்தாலும், மாஸ்டர் படத்துக்கு அப்புறம் விஜய் -முருகதாஸ் கூட்டணியை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாகத்தான் அமைந்திருக்கிறது.

Share this story