அசுரன், தனுஷ், விஜய் சேதுபதி… தேசிய விருது வென்றவர்களின் பட்டியல்!
2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருது வென்றவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
67 வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 2019 ஆம் ஆண்டிற்கான திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. போன வருடம் மே மாதமே நடக்க வேண்டிய இந்த விருது விழா கொரோனா பாதிப்பால் தள்ளி வைக்கப்பட்டது.
தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படதிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல் சிறந்த நடிகருக்கான தேசிய விருது ‘அசுரன்’ படத்தில் நடித்ததற்காக தனுஷ் மற்றும் இந்தி நடிகர் மனோஜ் பாஜபாயி இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
‘விஸ்வாசம்’ படத்திற்காக டி இமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடுவர்கள் விருது பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு கிடைத்துள்ளது.