தேசிய விருதுகளைக் குவித்த தென்னிந்தியத் திரையுலகம்!

தேசிய விருதுகளைக் குவித்த தென்னிந்தியத் திரையுலகம்!

67 வது தேசிய திரைப்பட விருதுகள் வென்றவர்களின் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்கள், நடிகர்கள் மற்றும் தொழிநுட்பக் கலைஞர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு தென்னிந்திய திரைப்படங்கள் மற்றும் நடிகர்கள் அதிகளவிலான விருதுகளைக் குவித்துள்ளனர். தமிழில் விருதுகள் வென்ற நடிகர்கள் மற்றும் படங்களைப் பார்த்துவிட்டோம்.

இந்திய அளவில் 2019-ம் ஆண்டிற்கான தேசிய விருது வென்றவர்களின் பட்டியல் பின்வருமாறு:

சிறந்த இசையமைப்பாளர் : விஸ்வாசம் படத்திற்காக டி இமான்.
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்: மகர்ஷி
சிறந்த அறிமுக படம்: ஹெலன் (மதுகுட்டி சேவியர்).
சிறந்த திரைப்படம்: மரக்கர் அரபிகடலிண்டே சிம்ஹம்.
சிறந்த ஆடை வடிவமைப்பு: சுஜித் சுதாகரன் மற்றும் சாய் (மரைக்கார்)
சிறந்த கிராஃபிக்ஸ் : சித்தார்த் பிரியதர்ஷன்(மரைக்கார்).
சிறப்பு ஜூரி விருது: ஒத்த செருப்பு.
சிறந்த குழந்தை நடிகர்: நாக விஷால் (கே.டி. என்கிற கருப்புதுரை).
சிறந்த ஆக்ஷன் இயக்கம்: விக்ரம் மோர் (அவனே ஸ்ரீமன் நாராயணா).
சிறந்த ஒளிப்பதிவு: கிரிஷ் கங்காதரன் (ஜல்லிக்கட்டு).
சிறந்த எடிட்டிங்: நவீன் நூலி (ஜெர்சி).
சிறந்த நடன இயக்குனர்: ராஜுசுந்தரம் (மகர்ஷி).

Share this story

News Hub