Tuesday, April 13, 2021

கொரானா எதிரொலி… ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பிளானை மாற்றும் மணிரத்னம்…

கொரானா அதிகரித்து வருவதால் பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் பிளானில் மணிரத்னம் மாற்றங்களை செய்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின்...

Movie Stills

கட்டாயம் பார்க்க வேண்டிய படம் ‘பூமி’ -சினிமா விமர்சனம்.

ஹீரோ ஜெயம் ரவியின் பெயர்தான் பூமிநாதன்.அதன் சுருக்கம் தான் ‘பூமி’.செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழும் சூழலை உருவாக்க முடியும் என்று பிராக்டிகலாக விளக்கம் கொடுக்கும் நாசா விஞ்ஞானியான பூமி, ஒரு மாத விடுமுறைக்காக திருநெல்வேலி அருகிலுள்ள கிராமத்துக்கு வருகிறார். வந்த இடத்தில் தான் தெரிகிறது… கார்ப்பரேட் ஆட்களின் அடாவடியில் இங்குள்ள விவசாயிகளின் பரிதாப நிலையும், தண்ணீர் ஆதாரங்களையும் எப்படியெல்லாம் ஏமாற்றி சுரண்டுகிறார்கள் என்பதும் தெரிய வருகிறது. செவ்வாய் கிரகத்துக்கு போயிட்டு மூன்று வருஷங்களுக்கு அப்புறம் வந்தால் நம்ம ‘பூமி’யே வழியில்லாத ‘சோமாலியாவா’க மாறிவிடும் என்பதை உணர்ந்து ஜெயம் ரவி எடுக்கும் முயற்சிக்கு இந்த கார்ப்பரேட் ஆட்கள் எப்படியெல்லாம் தங்கள் அதிகார பலத்தைக் காட்டுவார்கள் என்பதும்… பூமிக்கு வெற்றியா தோல்வியா என்பதும்தான் இந்தப் படம்.

jayam-ravi-3

இலுமினாட்டிகள் என்று சொல்லப்படுகிற ஒரு பதிமூணு குடும்பங்களின் கட்டுப்பாட்டில்தான் இந்த உலகம் இருக்கிறது என்பதில் தொடங்கி, அரசியல்வாதிகளும், அரசு எந்திரங்களும் அவர்களின் அடிமைகளாக இருக்கிறார்கள் என்பதுவரை சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குனர் லக்ஷ்மணின் துணிச்சலைப் பாராட்டலாம். வளர்ச்சி என்ற பெயரில் கார் தொழிசாலைகளையும் இன்ன பிற கார்பரேட்களும் இங்கு வருவதற்கு சொல்லப்படும் ‘வேலை வாய்ப்பு’ அரசியலை அடிச்சு துவைச்சு தொங்க விட்டிருக்கிறார்.

வருமானத்துக்காக அரசு கார்பரேட்களை நம்ப வேண்டாம், இயற்கை விவசாயத்தை முன்னெடுத்தாலே போதும், இந்த நாடு யாருக்கும் அடிமையாக இருக்க வேண்டாம் என்பதை புள்ளி விவரங்களோடு சொல்வது அபாரம்.

நாட்டுக்கு தற்போது தேவையான ஒரு கருத்தை சொல்ல முற்படும் போது சில இயக்குனர்கள் குழப்பமாவது போல் லக்ஷ்மணனும் சில இடங்களில் கோட்டை விட்டிருக்கிறார். வீரியமான விதைக்கு எங்களைவிட்டால் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கும் என்று கார்ப்பரேட் கேள்வி கேட்கும் போது கோவில் கலசங்களில் விதை தானியம் சேர்த்து வைக்கப்படும் பாரம்பர்யம் பற்றிச் சொல்லியிருப்பது வரவேகக்கூடிய காட்சிதான். என்றாலும், பாரம்பர்ய நெல் விதைகளைப் பாதுகாப்பதற்கே தன் வாழ்க்கையைப் பணயம் வைத்த நெல் ஜெயராமன், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் போன்றவர்களை கதைக்குள் கொண்டு வந்திருந்தால் படத்திற்கு இன்னும் கூடுதல் அழுத்தம் கிடைத்திருக்கும். அந்த வாய்ப்பைக் கோட்டை விட்டிருக்கிறார்!

படம் முழுக்க ஜெயம் ரவியையும், வில்லன் நடிகரான ரோகித் ராயையும் மட்டுமே மையமாக வைத்து கதை நகரப் போகிறது என்பதற்காக, லவ் போர்சன் என்று படம் தொடங்கும் போது வரும் காட்சிகள் படு அபத்தம். அதற்கு இன்னொரு காரணம் – திருநெல்வேலி கிராமத்தில் கதை நடக்கிறது என்பதற்கான எந்த தடயமும் இல்லாமல் தெலுங்கு சினிமாவாக காட்டியதுதான். இப்படி ஆங்காங்கே குறைகள் சற்று கூடுதலாக இருப்பதையும் மறுக்க முடியாது. ஜெயம் ரவி,ரோகித் ராய் இருவரும் செம டஃப் கொடுத்திருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்கள் எல்லோரும் கூட்டத்தோடு கூட்டமாக வந்து போகிறார்கள் அவ்வளவுதான்!

டெல்லியில் விவசாயிகள் நெடிய போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் எதற்காக போராடுகிறார்கள் என்பது தெரியாமல் இருக்கும் அப்பாவிகள் இந்தப் படத்தைக் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

Latest Posts

கொரானா எதிரொலி… ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பிளானை மாற்றும் மணிரத்னம்…

கொரானா அதிகரித்து வருவதால் பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் பிளானில் மணிரத்னம் மாற்றங்களை செய்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின்...

அது நடந்த ட்ரீட் வைக்க ரெடி… இத, நடிகை பவித்ரா எதுக்கு சொன்னாங்கன்னு தெரியுமா…

விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தில் நான் நடிக்கவில்லை என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை பவித்ரா. சின்னத்திரை சீரியல்கள் மூலம் ரசிகர்களிடையே...

தனுஷ் ஜோடியாகும் பிரபல தெலுங்கு பட நாயகி…

தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய பிரபல தெலுங்கு பட நாயகி ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் மாபெரும் வெற்றிப்பெற்ற...

தெலுங்கை தொடர்ந்து கன்னடத்தில் ரீமேக்காகும் ‘திரிஷ்யம் 2’… இயக்குனர் யார் தெரியுமா ?

‘திரிஷ்யம் 2’ வெற்றியை தொடர்ந்து கன்னடத்திலும் ரீமேக் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டது. மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கிய திரிஷ்யம் வெற்றியை தொடர்ந்து ‘திரிஷ்யம் 2’...

Actress

TTN Cinema