மலையாளத்தில் தொடர்ந்து கலக்கும் அர்ஜூன்… புதிய படத்தில் ஹீரோவாகிறார்…

மலையாளத்தில் தொடர்ந்து கலக்கும் அர்ஜூன்… புதிய படத்தில் ஹீரோவாகிறார்…

மலையாள சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கும் அர்ஜூன், தற்போது புதிய படம் ஒன்றில் ஹீரோவாக களமிறங்குகிறார்.

மலையாளத்தில் தொடர்ந்து கலக்கும் அர்ஜூன்… புதிய படத்தில் ஹீரோவாகிறார்…

தமிழில் படங்களில் அதிரடியாக நடித்து ஆக்ஷன் கிங்காக வலம் வருபவர் நடிகர் அர்ஜூன். இவர் நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்கள் ஆக்ஷனில் வந்து கலக்கி இருக்கிறது.. நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் நடித்து பல வெற்றி திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ‘முதல்வன்’ திரைப்படம், இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

மலையாளத்தில் தொடர்ந்து கலக்கும் அர்ஜூன்… புதிய படத்தில் ஹீரோவாகிறார்…

புதிய ஹீரோக்களின் வரவால் இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து போகவே, காலத்திற்கு ஏற்றாற்போல் வில்லன், குணசித்திர நடிகர் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்த கதாபாத்திரங்களில் அவரின் நடிப்பு, ஹீரோவுக்கு இணையாக இருக்கும். இருந்தப்போதிலும் அர்ஜூனின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது.

மலையாளத்தில் தொடர்ந்து கலக்கும் அர்ஜூன்… புதிய படத்தில் ஹீரோவாகிறார்…

தமிழை விட மலையாள சினிமாவில் தற்போது அதிக வாய்ப்புகள் அர்ஜூனுக்கு குவிந்து வருகிறது. நடிகர் திலீப்பின் நடிப்பில் வெளியான ‘ஜான் டேனியல்’ படத்தில் அர்ஜூன் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரின் நடிப்பு, மலையாள ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து மோகன் லாலின் ‘மரைக்கார்’ என்ற வரலாற்று திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து புகழ்பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது ‘விருன்னு’ என்ற புதிய படத்தில் ஹீரோவாக அர்ஜூன் நடிக்க உள்ளார். இந்த படத்தை கண்ணன் இயக்கவிருக்கிறார். ஆஷா சரத், முகேஷ், ஹரீஷ் பெராடி ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

Share this story