இயக்குனராக அவதாரம் எடுத்த அட்டகத்தி தினேஷ்!

இயக்குனராக அவதாரம் எடுத்த அட்டகத்தி தினேஷ்!

நடிகர் தினேஷ் புதிய படம் ஒன்றை இயக்கவிருப்பதன் மூலம் சினிமாவவில் இயக்குனராகக் களமிறங்க உள்ளார்.

நடிகர் தினேஷ் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘அட்டகத்தி’ படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் அவரை கோலிவுட்டில் மிகவும் பிரபலமாக்கியது. அதிலிருந்து தற்போது வரை அவர் அட்டகத்தி தினேஷ் என்று தான் அழைக்கப்பட்டு வருகிறார்.

அட்டகத்தி படத்தை அடுத்து குக்கூ, திருடன் போலீஸ், விசாரணை அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் அட்டகத்தி முக்கியமானவர். மாஸ் ஹீரோ என்ற வரையறைக்குள் வராமல் நடிப்பிற்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களிலே தொடர்ந்து நடித்து வருகிறார் தினேஷ்.

இயக்குனராக அவதாரம் எடுத்த அட்டகத்தி தினேஷ்!

நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்த தினேஷ், தற்போது இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். ‘வயிறுடா’ என்ற படத்தை தினேஷ் நடித்து இயக்கவுள்ளார். அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் போஸ்ட்டரைப் பார்க்கும் போது படம் முந்தைய கால படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story