குடும்பத்துடன் சென்று கொரானா நிவாரண நிதி வழங்கினார் நடிகர் ஜெயம் ரவி

குடும்பத்துடன் சென்று கொரானா நிவாரண நிதி வழங்கினார் நடிகர் ஜெயம் ரவி

முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூபாய் 10 லட்சத்தை மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் ஜெயம் ரவி மற்றும் குடும்பத்தினர் வழங்கினர்.

தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை பரவது அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுபாடுகளை அரசு கொண்டு வந்துள்ளது. கொரானா வைரசின் தாக்குதலை சமாளிக்கும் வகையில் புதிய மருத்துவ கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. இதனால் நிதிச்சுவை அதிகரித்து வருவதால், அதை சமாளிக்க பொதுமக்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நிதி வழங்க வேண்டுமென தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சமீபத்தில் கேட்டுக்கொண்டார்

குடும்பத்துடன் சென்று கொரானா நிவாரண நிதி வழங்கினார் நடிகர் ஜெயம் ரவி

இதையடுத்து சினிமா துறையை சார்ந்த முக்கிய நட்சத்திரங்கள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நிவாரண உதவி அளித்து வருகின்றனர். ஏற்கனவே சிவகுமார் குடும்பத்தினர் ஒரு கோடியும், அஜித் 25 லட்சம், ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா 1 கோடி, ஏஆர் முருகதாஸ் 25 லட்சம், இயக்குனர் ஷங்கர் 10 லட்சம், நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம், இயக்குனர் வெற்றிமாறன் 10 லட்சம் என தினந்தோறும் நிவாரண நிதி வழங்கி தங்களது பங்களிப்பை செலுத்தி வருகின்றனர்.

குடும்பத்துடன் சென்று கொரானா நிவாரண நிதி வழங்கினார் நடிகர் ஜெயம் ரவி

அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி, அவரது தந்தையும், தயாரிப்பாளருமான எடிட்டர் மோகன், அவரது சகோதரர் இயக்குனர் மோகன்ராஜா ஆகியோர் தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். நிவாரண நிதி வழங்கி வரும் திரைப்பிரபலங்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Share this story