ஜாலியாக பாட்டு பாடி படக்குழுவினரை உற்சாகப்படுத்தும் நெல்லை சிவா… வைரலாகும் கடைசி வீடியோ!

ஜாலியாக பாட்டு பாடி படக்குழுவினரை உற்சாகப்படுத்தும் நெல்லை சிவா… வைரலாகும் கடைசி வீடியோ!

நடிகர் நெல்லை சிவாவின் கடைசி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் நெல்லை சிவா சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

ஜாலியாக பாட்டு பாடி படக்குழுவினரை உற்சாகப்படுத்தும் நெல்லை சிவா… வைரலாகும் கடைசி வீடியோ!

நடிகர் நெல்லை சிவா தமிழில் இதுவரை 500-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது கம்பீரமான நெல்லைத் தமிழ் பார்க்கும் அனைவரையும் ரசிக்க வைக்கும். கடைசியாக த்ரிஷா நடிப்பில் வெளியான ‘பரமபதம் விளையாட்டு’ படத்தில் நடித்திருந்தார். வடிவேலுவுடன் இவர் நடித்துள்ள கிணற்றை காணும் என்ற காமெடி காட்சி மிகவும் பிரபலம்.

தற்போது நடிகர் நெல்லை சிவா இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் சாம்ஸ் இதைப் பகிர்ந்துள்ளார். அன்ஹா வீடியோவில் நெல்லை சிவா பந்த பாசன் என்ற படத்திலிருந்து நித்தம் நித்தம் மாறுகின்ற பாடலைப் பாடுகிறார். சாம்ஸ் அதற்கு நடனம் ஆடுகிறார். இந்த வீடியோ பார்ப்போரது மனதை உருக வைக்கிறது.

Share this story