பிரபல நடிகர் பவன் கல்யாணுக்கு கொரானா உறுதி…

பிரபல நடிகர் பவன் கல்யாணுக்கு கொரானா உறுதி…

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு கொரானா தொற்று உறுதியாகியுள்ளது.

நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘வக்கீல் சாப்’. இந்தி பட ரீமேக்கான இந்த படத்திற்கு தெலுங்கில் ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர். ‌ ஸ்ரீராம் வேணு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்துள்ளது. பெரும்பாலான திரையரங்குகள் நிரம்பி வழியும் நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிரபல நடிகர் பவன் கல்யாணுக்கு கொரானா உறுதி…

இதற்கிடையே இந்த படத்தில் நடித்த நிவேதா தாமஸுக்கு கொரானா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து நடிகர் பவன் கல்யாணின் உதவியாளர், பாதுகாவலர் மற்றும் உடன் இருந்த சிலருக்கு கொரானா தொற்று ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி பவன் கல்யாணும், தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

பிரபல நடிகர் பவன் கல்யாணுக்கு கொரானா உறுதி…

இந்நிலையில் பவன் கல்யாணுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரானா பரிசோதனை செய்ததில்,தொற்று இருப்பது உறுதியானது.இதைத்தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையறிந்த பவன் கல்யாண் ரசிகர்கள், அவர் பூரண குணம் பெற்றது விரைவில் சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Share this story