முதல்வரை நேரில் சந்தித்த விஜய் சேதுபதி.. கொரானா பேரிடர் நிவாரண நிதியளிப்பு !

முதல்வரை நேரில் சந்தித்த விஜய் சேதுபதி.. கொரானா பேரிடர் நிவாரண நிதியளிப்பு !

கொரானா பேரிடர் நிவாரண நிதியாக ரூபாய் 25 லட்சத்தை நடிகர் விஜய் சேதுபதி முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.

தமிழ் திரையுலகில் ரொம்பவே பிசியாக இருந்து வருகிறார் விஜய் சேதுபதி. ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ள இவர், அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது தமிழை தவிர தெலுங்கிலும், இந்தியிலும் பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். சமீபத்தில்கூட கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இரண்டும் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அதேநேரம் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் அடுத்தடுத்து வெளியாக தயாராக உள்ளன.

முதல்வரை நேரில் சந்தித்த விஜய் சேதுபதி.. கொரானா பேரிடர் நிவாரண நிதியளிப்பு !

இதற்கிடையே கொரானாவின் இரண்டாம் அலையில் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கிலிருந்து தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து படப்பிடிப்புகளும் ஒன்றன்பின் ஒன்றாக துவங்கி நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்கையில் கொரானாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் பணிகளை அரசு செய்து வருகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனை கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதற்கு தேவைப்படும் நிதி ஆதாரத்தை பெருக்கும் பொருட்டு அனைவரும் நிதியளிக்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டது. அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் இன்று நேரில் சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி, ரூபாய் 25 லட்ம் கொரானா பேரிடர் நிவாரண நிதி வழங்கினார். ஏற்கனவே ரஜினி, அஜீத், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களும் நிதியளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story