விடியோ காலில் பேசிக்கொண்ட தளபதி மற்றும் இசைப்புயலின் வாரிசுகள் !

விடியோ காலில் பேசிக்கொண்ட தளபதி  மற்றும் இசைப்புயலின் வாரிசுகள் !

நடிகர் விஜயின் மகன் சஞ்சய் விஜயும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் மகன் அமினும் வீடியோ காலில் பேசிக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் தாயார் கரிமா பேகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமானார். இதனால் திரையுலக பிரபலங்கள் பலரும் ரஹ்மானுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.இந்நிலையில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் விஜயும் , இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் மகன் அமினும் வீடியோ கால் பேசி உள்ளனர்.

விடியோ காலில் பேசிக்கொண்ட தளபதி  மற்றும் இசைப்புயலின் வாரிசுகள் !

திரையுலக பிரபலங்களின் வாரிசுகள் பலரும் நட்புறவில் இருப்பது தெரிந்த விஷயம் தான். சமீபத்தில் கூட நடிகர் விக்ரம், இயக்குனர் ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் ஆகியோரின் மகன்கள் ஒன்றினைந்து சந்தித்த புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது.

ரஹ்மானின் மகன் அமீன் ”ஓ காதல் கண்மணி” என்ற படத்தில் ஒரு பாடலை பாடி திரையுலகில் பாடகராக அறிமுகமானார். நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் குறும்படம் ஒன்றில் அறிமுக நடிப்பை வெளிப்படுத்தி வரவேற்பைப்பெற்றுள்ளார்.

Share this story