ரசிகரின் திறமையை பாராட்டி கௌரவித்த மக்கள்செல்வன் விஜய் சேதுபதி !

ரசிகரின் திறமையை பாராட்டி கௌரவித்த மக்கள்செல்வன் விஜய் சேதுபதி !

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது தமிழ்,மலையாளம்,ஹிந்தி என டஜன் கணக்கில் படங்கள் நடித்து வருகிறார். சமீபத்தில் லாபம் படப்பிடிப்பை முடித்த அவர், இயக்குனர் விக்னேஷ் சிவனோடு காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துவருகிறார்.

தற்போது தளபதி விஜயுடன் இணைந்து நடித்த மாஸ்டர் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் விஜய்சேதுபதி ரசிகர் ஒருவர் தீட்டிய மாஸ்டர் ஓவியத்தின் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பாராட்டி பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

Share this story