பிறந்து இரண்டே வாரம் ஆன குழந்தைக்கு இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கிய விக்ரம் பட நடிகை!
நடிகை அனிதா ஹசானந்தனி, பிறந்து 12 நாட்களே ஆன தனது குழந்தைக்கு இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கியுள்ளார்.
ஹிந்தி நடிகை அனிதா ஹசானந்தனி தமிழில் ‘வருஷமெல்லாம் வசந்தம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதையடுத்து விக்ரம் நடித்த சாமுராய், சுக்ரன், மகாராஜா ஆகிய தமிழ் படங்களிலும், மற்ற மொழி படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். ஹிந்தியில் பல தொடர்களிலும் நடித்து வருகிறார்.
நடிகை அனிதா ஹசானந்தனி 2013-ம் ஆண்டு, ரோகித் ரெட்டி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த பிப்ரவரி 9-ந் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை அனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார். அதோடு குழந்தையைக் கையில் வைத்திருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார். அதையடுத்து நடிகைக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.
அனிதா தன் குழந்தைக்கு ஆரவ் என்று பபெயர் வைத்துள்ளார். அதோடு தனது மகன் ஆரவ் ரெட்டிக்கு தனியாக இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றையும் அனிதா துவங்கியுள்ளார்.குழந்தையின் புகைப்படங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை அந்தப் பக்கத்தில் அவர் பதிவிட இருப்பதாகக் கூறப்படுகிறது.