நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கம்

நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கம்

விதிமீறல் காரணமாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

நடிகை கங்கனா ரணாவத் கடந்த சில மாதங்களாக சர்ச்சைக்குரிய பதிவுகள் மட்டுமே வெளியிட்டு வந்தார். பாலிவுட் திரைப்பிரபலங்களை மட்டுமே சாடி வந்த அவர், பின்னர் ஆளும் மத்திய அரசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களையும் சாடி பதிவுகள் வெளியிட்டு வந்தார்.

நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கம்

சமீபத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து கங்கனா வெளியிட்ட ட்வீட்களின் காரணமாகத் தான் கங்கானாவின் ட்விட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கம்

மம்தா பானர்ஜி குறித்து கங்கனா பதிவிட்ட டீவீட்டில் ஒரு மோசமான வார்த்தையை பயன்படுத்தியதாகவும், எனவே விதிமீறல் காரணமாக ட்விட்டர் நிறுவனம் கங்கானாவின் கணக்கை முடக்கம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கங்கனாவின் கணக்கு முடக்கம் செய்யப்பட்டதற்கு வரவேற்பும் எதிர்ப்புகளும் ஒருசேர எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this story