தோழியுடன் டான்ஸ்… தனுஷ் பட நடிகை க்யூட் வீடியோ…

தோழியுடன் டான்ஸ்… தனுஷ் பட நடிகை க்யூட் வீடியோ…

பிரபல நடிகை நஸ்ரியா, க்யூட்டாக நடனம் ஆடும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தோழியுடன் டான்ஸ்… தனுஷ் பட நடிகை க்யூட் வீடியோ…

‘நேரம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை நஸ்ரியா. அதன்பிறகு அட்லி இயக்கத்தில் உருவான ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இதைத்தொடர்ந்து திருமணம், தனுஷின் நய்யாண்டி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் க்யூட் நடிகையாக வலம் வந்த நஸ்ரியாவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

தோழியுடன் டான்ஸ்… தனுஷ் பட நடிகை க்யூட் வீடியோ…

சினிமாவில் பிசியாக நடித்து வந்த நஸ்ரியாவுக்கு கடந்த 2014ம் ஆண்டு நடிகர் ஃபஹத் பாசிலுடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகியிருந்தார். பின்னர் நடிகர் பிருத்விராஜ் நடித்த ‘கூட்’ படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்தார் நஸ்ரியா. இந்த படம் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து, அவரது கணவர் ஃபஹத் பாசிலுடன் ‘டிரான்ஸ்’ என்ற படத்தில் கடைசியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் நடிகை நஸ்ரியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு பாடலுக்கு தனது தோழியுடன் நஸ்ரியா நடனமாடுகிறார். இந்த க்யூட் டான்ஸ் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Share this story