மகேஷ் பாபு படத்தில் நடிப்பதாக வதந்தி… நச்சென்று பதிலளித்த பூஜா ஹெக்டே…
மகேஷ் பாபு படத்தில் நடிப்பதாக வந்த வதந்திக்கு தடாலடி பதிலை நடிகை பூஜா ஹெக்டே கொடுத்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் ‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடைபெற்று வந்தது. இந்த ஷூட்டிங்கில் கலந்துக்கொண்டு விஜய்யுடன் பாடல் காட்சி ஒன்றில் நடித்து வந்தார் பூஜா ஹெக்டே. ஷூட்டிங் முடிந்து சமீபத்தில் மும்பை திரும்பிய அவருக்கு கொரானா அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது. இதை அவரே தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார்.
தொடர்ந்து தனிமையில் இருந்து வந்த பூஜா, குணமடைந்து வருவதாகவும் விரைவில் வெளியே வரயிருப்பதாக தெரிவித்திருந்தார். இதற்கிடையே மகேஷ்பாபு நடிக்கவிருக்கும் புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.
இதற்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதில் அளித்துள்ளார் பூஜா ஹெக்டே. அதில் தற்போது என்னுடைய கைவசம் ஆச்சார்யா, ராதே ஷியாம், மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர், சர்க்கஸ் போன்ற படங்கள் வரிசையாக உள்ளது. அதோடு விஜய்யின் படத்திலும் தற்போது நடித்து வருகிறேன். இந்த படங்களின் மீதுதான் என் முழு கவனமும் இருந்து வருகிறது. அதனால் தொற்றிலிருந்து குணமடைந்த பிறகு கைவசம் உள்ள படங்களை முடிக்க உள்ளேன், இதையடுத்து மற்ற படங்களும் கால்ஷீட் கொடுப்பது பற்றி யோசிப்பேன் என்று தடாலடியாக பதிலளித்துள்ளார்.