கடும் எதிர்ப்புகளிடையே வெளியானது ’தி ஃபேமிலிமேன் 2′.. ரசிகர்கள் வரவேற்பு!

கடும் எதிர்ப்புகளிடையே வெளியானது ’தி ஃபேமிலிமேன் 2′.. ரசிகர்கள் வரவேற்பு!

நடிகை சமந்தாவின் ’தி ஃபேமிலிமேன் 2′ வெப் தொடர் கடும்‌‌ எதிர்ப்பை மீறி இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அமேசான் பிரைமில் ‘தி ஃபேமிலிமேன்’ முதல் சீசனின் வெளியாகி மாபெரும்‌ வெற்றிப்பெற்றதை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் வெளியாகியுள்ளது. இந்த வெப் சீரிஸை இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். இந்த வெப் சீரிஸில் மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடும் எதிர்ப்புகளிடையே வெளியானது ’தி ஃபேமிலிமேன் 2′.. ரசிகர்கள் வரவேற்பு!

இந்த வெப் சீரிஸில் தமிழர்கள் தவறாக சித்தரித்து காட்டப்பட்டுள்ளதாக கூறி சீமான், வைகோ உள்ளிட்ட பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோன்று இந்த வெப் சீரிஸை தடை செய்யக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌எழுதியது. ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த ‌‌‌பதிலும்‌ அளிக்காமல் உள்ளது.

கடும் எதிர்ப்புகளிடையே வெளியானது ’தி ஃபேமிலிமேன் 2′.. ரசிகர்கள் வரவேற்பு!

இந்நிலையில் பல்வேறு தரப்பினர்‌ கொடுத்த எதிர்ப்புகளை மீறி திட்டப்படி ‘தி ஃபேமிலிமேன் 2’இன்று வெளியாகியுள்ளது.அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள இந்த வெப் சீரிஸுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Share this story