‘வலிமை’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவரா?

‘வலிமை’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவரா?

அஜித் – எச்.வினோத் கூட்டணி இரண்டாவதாக ‘வலிமை’ படத்திற்காக இணைந்துள்ளனர். இப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி எனும் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

‘வலிமை’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவரா?

மூத்த நடிகை சுமித்ரா அஜித்தின் தாயாக இப்படத்தில் பெரும்பங்கு வகிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர் பொதுவாக மாஸ் ஹீரோக்கள் நடிக்கும் தமிழ் திரைப்படங்களில் தாயாக நடித்திருப்பவர். முன்பு அஜித்துடன் பகைவன் மற்றும் வீரம் படங்களிலும் நடித்திருந்தார். படத்தில் இவரை தொடர்ந்து ஹுமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.போனி கபூர் தயாரிக்கிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

‘வலிமை’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவரா?

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து அஜித் இரண்டாவது முறையாக ஹெச் வினோத் உடன் கூட்டணி அமைத்து ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். ‘வலிமை’ படம் ரேஸிங் கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஹைதராபாத்தில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் இப்படம் ஜனவரி மாதத்திற்குள் நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் வரும் பொங்கலுக்கு தல அஜித் ரசிகர்களுக்கு நல்ல ஒரு விருந்து இருக்கிறது என்றே சொல்லலாம்.

Share this story