விஷ்ணு விஷாலுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்!
விஷ்ணு விஷால் நடித்து வரும் மோகன்தாஸ் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார்.
மனு ஆனந்த் இயக்கத்தில் ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தில் விஷ்ணு விஷால் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து, தனது அடுத்த படமான ‘மோகன்தாஸ்’ படத்திற்குத் தயாராகிவிட்டார். இந்தப் படத்தை முரளி கார்த்திக் என்பர் இயக்கவிருக்கிறார். விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். கே.எஸ்.சுந்தரமூர்த்தி என்பவர் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. டீசரைப் பார்க்கும் போது இப்படம் முழுக்க கிரைம் திரில்லராக இருக்கும் என்று தெரிகிறது.
இப்படம் குறித்த தற்போதைய அப்டேட் என்னவென்றால், ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பதிவிட்டுள்ள விஷ்ணு விஷால் “நான் எப்போதும் உங்கள் நடிப்பிற்கு ரசிகனாக இருந்து வருகிறேன். நீங்கள் எப்போதுமே ஒரு நல்ல நண்பராக இருந்தீர்கள்.. இப்போது, மோகன்தாஸ் படத்தில் ஒன்றாக வேலை செய்வோம். எங்கள் படத்திற்கு உங்களை வரவேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.