மும்பையில் பிரபாஸூக்கு 120 அடி உயர பிரம்மாண்ட கட்அவுட்

கே.ஜி.எப். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்ததாக ‘சலார்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். பிரபாஸுடன் இணைந்து மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ் வில்லனாகவும், ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக இப்படம் வெளியாகவுள்ளது. அண்மையில் இயக்குநர் பிரசாந்த் நீல் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து படப்பிடிப்பு தளத்தின் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. இப்படத்தின் டீசர் கடந்த ஜூலை 6-ம் தேதி வெளியானது. அண்மையில் படத்தின் ட்ரைலரும் வெளியாகியது.
R Mall, Mumbai, just got #Salaar -fied!
— Hombale Films (@hombalefilms) December 18, 2023
A massive 120-feet cutout of Rebel Star #Prabhas is igniting the hype for this action epic 💥#SalaarCeaseFire in cinemas from December 22nd!
Book your tickets now 🎟️ https://t.co/G5kIJbPjlH#PrashanthNeel @PrithviOfficial @shrutihaasan… pic.twitter.com/SnsK2DSPGR
இந்நிலையில், மும்பையில் உள்ள பிரபலமான ஆர் மாலில் சலார் திரைப்பட பிரபாஸூக்கு சுமார் 120 அடி உயரத்தில் பிரம்மாண்ட கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. வரும் 22-ம் தேதி இத்திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.