ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிய "2018"

ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிய "2018"

ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் ‘2018 எவேர்யோனே ஐஸ் எ ஹீரோ’. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. நோபின் பால் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு கேரளா சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் படம் தமிழ், தெலுங்கில் டப் செய்யப்பட்டு  வெளியானது. உலகளவில் 200 கோடி ரூபாய்க்கும் அதிக வசூலைப் பெற்ற முதல் மலையாளப் படம் என்ற சாதனையையும் இந்தப் படம் பெற்றது.

ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிய

இத்திரைப்படம் இந்த ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படங்கள் பிரிவில் ஆஸ்கர் பட்டியலுக்கு இந்திய அரசால் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதில் பங்கேற்க உள்ள படங்களின் பட்டியலில் இத்திரைப்படம் இடம்பெறவில்லை.  இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Share this story