“மன்னித்துவிடுங்கள்…..”-‘2018’ இயக்குநரின் நெகிழ்ச்சி பதிவு!

photo

ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட 2018 திரைப்படம் இறுதிப்பட்ட்டியலில் தேர்வாகாத நிலையில் படத்தின் இயக்குநர் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

photo

இந்தியாவிலிருந்து மலையாள படமான 2018 படம் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது. அந்த படத்தை அந்தோணி ஜோசப் இயக்கியிருந்தார். டோவினோ தாமஸ் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். இந்த நிலையில் படம் இறுதிப்பட்டியலில் தேர்வாகாமல் வெளியேறியது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது.

இது குறித்து கூறிய இயக்குநர் “உங்கள் அனைவரையும் ஏமாற்றியதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த கனவு பயணத்தின் என் வாழ்நாள் முழுவதும் போற்றுவேன். இந்தியாவை பிரதிநிதித்துவ படுத்தும் இந்த பயணத்துக்கு என்னை தேர்ந்தெடுத்த  இறைவனுக்கு நன்றி. எனது அடுத்த கனவின் ஆரம்பம் இன்று துவங்குகிறது. ஆஸ்கர் விருதுகள் காத்திருக்கின்றன. நான் கலந்துக்கொள்ள தயாராக இருக்கிறேன்.” என கூறியுள்ளார்.

Share this story