“என்ன இப்படி ஆயிடுச்சு……”-ஆஸ்கர் ரேசிலிருந்து வெளியேற்றப்பட்ட ‘2018’.

photo

மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 2018படம் அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட நிலையில் இறுதி பட்டியலில் தேர்வாகாமல் வெளியேறியது.

photo

சினிமாத்துறையின் மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுவது ஆஸ்கர் விருது. வாழ்கையில் ஒரு முறையாவது அதை வாங்கிவிட வேண்டும் என்பதே பல கலைஞர்களின் கனவு. இந்த நிலையில் 96வது ஆஸ்கர் விருது அடுத்த ஆண்டு மார்ச் 10ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்க உள்ளது. அதற்கு பல நாடுகளிலிருந்து சிறந்த படங்கள் அனுப்பப்பட்டு வரும்  நிலையில் இந்தியாவிலிருந்து மலையாள படமான 2018 படம் அனுப்பப்பட்டது. அந்த படத்தை அந்தோணி ஜோசப் இயக்கியிருந்தார். டோவினோ தாமஸ் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார்.

photo

இந்த நிலையில் தற்போது ஆஸ்கர் விருதில் பங்கேற்க உள்ள படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் வெளிநாட்டு திரைப்பட பிரிவில் போட்டியிட்ட 2018 படம் தேர்வாகவில்லை இது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது.

Share this story