53வது திரைப்பட விருதுகள் அறிவிப்பு.. சிறந்த நடிகராக மம்மூட்டி தேர்வு !

mamooty

 53வது கேரள மாநில திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் மம்மூட்டி சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

ஆண்டுதோறும் கேரள மாநிலத்தின் சார்பில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 53வது கேரள மாநில விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கவுதம் கோஷ் தலைமையிலான குழு விருது பெறுபவர்களை தேர்ந்தெடுத்துள்ளது. 

mamooty

மொத்தம் 154 திரைப்படங்கள் போட்டியிட்ட நிலையில் 30 படங்கள் இறுதி செய்யப்பட்டன. அதில் சிறந்த நடிகராக மம்மூட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தில் நடித்ததற்காக இந்த விருது கிடைத்துள்ளது.

இதையடுத்து விருது பெறுபவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.   

சிறந்த படம் : நண்பகல் நேரத்து மயக்கம்

சிறந்த நடிகர்  : மம்மூட்டி

சிறந்த நடிகை  : வின்சி (ரேகா)

சிறந்த இயக்குனர்  : மகேஷ் நாராயணன் ( அறியிப்பு)

சிறந்த குணசித்திர நடிகர்  : பி பி குஞ்சி கிருஷ்ணன் ( ன்னா தான் கேஸ் கொடு )

சிறந்த குணசித்திர நடிகை  : தேவி வர்மா ( சவுதி வெள்ளக்கா )

 

Share this story