7ஜி ரெயின்போ காலனி தெலுங்கில் ரீ ரிலீஸ்..... ரசிகர்கள் குதூகலம்....

7ஜி ரெயின்போ காலனி தெலுங்கில் ரீ ரிலீஸ்..... ரசிகர்கள் குதூகலம்....

கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ரெயின்போ காலனி. செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் ரவிகிருஷ்ணன் நடித்திருந்தார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த பாடல்கள்.  தற்போது 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க செல்வராகவன் திட்டமிட்டுள்ளார். இப்படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


இந்நிலையில் தெலுங்கில் ரெயின்போ காலனி திரைப்படம், மீண்டும் ரீ ரிலீஸ் வெளியானது. படம் வெளியான முதல் நாளிலேயே ஒரு கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. மேலும், ஆந்திராவில் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காணொலியை செல்வராகவன் பகிர்ந்துள்ளார். 

Share this story