ரிலீசுக்கு தயாரான நயன்தாராவின் 'கோல்டு'... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு !

gold

பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள 'கோல்டு' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

'பிரேமம்' படத்தின் மூலம் ரசிகர்களின் நெஞ்சை கொள்ளைக் கொண்ட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கோல்டு'. இந்த படத்தில் பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் மலையாள முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். 

https://twitter.com/sekartweets/status/1595325556635357184?t=r3Kw4Sgq4_NjQVGbGOCMbg&s=09

ராஜேஷ் முருகேசன்‌ இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி ஓணம் பண்டிகையையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பணிகள் முடியாததால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. 

தற்போது தயாரிப்பு பணிகள் முழுமையாக நிறைவுபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை தமிழகத்தில் எஸ்.எஸ்.ஐ பிரொக்ஷன்‌நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story