ஸ்ருதிஹாசன் நெஞ்சில் சிகரெட் போட்டாரா பாலகிருஷ்ணா ?... சர்ச்சையை கிளப்பிய பாடல் காட்சி !

Veera Simha Reddy Trailer

‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தில் வரும் பாடல் காட்சியில் நடிகர் பாலகிருஷ்ணா சிகரெட் வீசுவது சர்ச்சையாக வெடித்துள்ளது. 

தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் 'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படம் உருவாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் சங்கராந்தியையொட்டி வெளியாக உள்ளது. இந்த படத்தை கோபிசந்த் மல்லினேனி இயக்கியுள்ளார்.

Veera Simha Reddy Trailer

இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், ஹனிரோஸ், துனியா விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இந்த டிரெய்லரில் தன்னுடைய மிரட்டலான நடிப்பை பாலகிருஷ்ணா வெளிப்படுத்தியுள்ளார். 

Veera Simha Reddy Trailer

இந்நிலையில் இந்த டிரெய்லரில் உள்ள ஒரு பாடல் சர்சையை கிளப்பியுள்ளது. அதில் ஸ்ருதிஹாசனுடன் சேர்ந்து பாலகிருஷ்ணா மாஸ் நடனம் ஒன்றை ஆடுகிறார். அதோடு சில துணை நடிகைகளும் இணைந்து நடனமாடுகின்றனர். அப்போது ஒரு நடிகையின் நெஞ்சில் சிகரெட்டை தூக்கிப்போட்டு பின்னர் வாயில் வரும்படி ஸ்டைலாக பாலகிருஷ்ணா நடித்துள்ளார். அந்த நடிகை ஸ்ருதிஹாசனா என ரசிகர்கள் நேற்று கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் அந்த நடிகை இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் பேயாக நடித்த நடிகை என்று கூறப்படுகிறது. 62 வயதாகும் பாலகிருஷ்ணாவிற்கு இதெல்லாம் தேவையா என நெட்டிசன்கள் பாலகிருஷ்ணாவை வறுத்தெடுத்து வருகின்றனர். 

 

Share this story