அடுத்தடுத்து அஜித் படத்தை ரீமேக் செய்யும் சிரஞ்சீவி.. அடுத்து எந்த படம் தெரியுமா ?

viswasam

‘வேதாளம்’ படத்தை தொடர்ந்து அடுத்து ஒரு படத்தை நடிகர் சிரஞ்சீவி ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மெகா ஸ்டார் சிரஞ்சீவி, அஜித்தின் அடுத்தடுத்த திரைப்படங்களை ரீமேக் செய்து வருகிறார். அந்த வகையில் தமிழில் அஜித் நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘வேதாளம்’. அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். இந்த படத்தில் அஜித்தின் தங்கையாக லஷ்மி மேனனும், கதாநாயகியாக ஸ்ருதிஹாசனும் நடித்திருந்தனர். 

viswasam

இந்த படத்தை ‘போலா சங்கர்’ என்ற தலைப்பில் தெலுங்கில் உருவாகி வருகிறது. மெஹர் ரமேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஏகே எண்டர்டைமண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. அஜித்தின் வேதாளம் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடித்து வருகிறார். சமீபத்தில் மொட்டை தலையுடன் இந்த படத்திற்காக சிரஞ்சீவி மாறிய புகைப்படம் வெளியானது.  இந்த படத்தில் நடிகை தமன்னா கதாநாயகியாகவும், கீர்த்தி சுரேஷ் தங்கை கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.

viswasam

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் சூப்பர் ஹிட்டடித்த படமான ‘விஸ்வாசம்’ படம் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது. இந்த படத்தில் தூக்குத்துரை கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வி.வி.விநாயக் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story