அடுத்த 5 ஆண்டுகளில் 3 ஆயிரம் கோடி முதலீடு.. ‘கேஜிஎப்’ நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு !

hombale films

அடுத்த 5 ஆண்டுகளில் 3 ஆயிரம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக ‘கேஜிஎப்’ பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 

 தென்னிந்தியாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான இருப்பது ஹோம்பலே பிலிம்ஸ். இந்த நிறுவனம் தொடர்ந்து பான் இந்தியா திரைப்படங்களை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவே திரும்ப பார்த்த ‘கேஜிஎப்’ திரைப்படத்தை தயாரித்தது இந்த நிறுவனம் தான். 

hombale films

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் இந்த நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான ‘காந்தாரா’ திரைப்படத்தையும் தயாரித்து வெளியிட்டது. இதைத்தொடர்ந்து  பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘சலார்‘, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரகு ‘தாத்தா’, பிரத்விராஜ் நடிப்பில் உருவாகவுள்ள ‘டைசன்’, ரிஷப் ஷெட்டி நடிக்கவுள்ள ‘ரிச்சர்ட் ஆண்டனி’, பகத் பாசில் நடிக்கவுள்ள ‘தூமம்’, ஸ்ரீ முரளி நடிக்கும் ‘பகீரா’ ஆகியவை இந்த நிறுவன தயாரிப்பில் உருவாகவுள்ளது. 

hombale films

 இந்நிலையில் ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அடுத்த 5 ஆண்டுகளில் நிறைய திரைப்படங்களை தயாரிக்கவுள்ளதால் அதற்கு 3 ஆயிரம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. 

 

 

Share this story