முடியல... சோஷியல் மீடியாவை விட்டு வெளியேறிய ‘கேஜிஎப்’ இயக்குனர்... என்ன காரணம் ?

prashanth neel

இயக்குனர் பிரசாந்த் நீல் சோஷியல் மீடியாவை விட்டு வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தென்னிந்தியாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் பிரசாந்த் நீல். 'கேஜிஎப்', ‘கேஜிஎப் 2’ படங்களை இயக்கி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார். இதையடுத்து பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

prashanth neel

சலார் படத்தை முடித்து ஜூனியர் என்டிஆரை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதற்கிடையே சமீபத்தில் யாஷ் பிறந்தநாளையொட்டி உருது மொழியில் பிரசாந்த் நீல் வாழ்த்து தெரிவித்திருந்தார். கன்னடத்தை அதிகம் நேசிக்கும் யாஷின் பிறந்தநாளுக்கு உருது மொழியில் வாழ்த்து தெரிவிப்பதாக என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். 

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் பிரசாந்த் நீலுக்கு எதிராக யாஷ் ரசிகர்கள் கொந்தளிக்க ஆரம்பித்தனர். அதேபோன்று இந்த விஷயத்தை சமூக வலைத்தளத்தில் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இதனால் டென்ஷனான பிரசாந்த் நீல் சமூக வலைத்தளத்திலிருந்து வெளியேறியுள்ளார். இது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Share this story