தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்... புதிய படத்தின் அப்டேட்

balakrishna

முன்னணி தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோக்களுடன் பலருடன் இணைந்து நடித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொழிலதிபர் கெளதம் கிச்சுலுவை திருமணம் செய்துக்கொண்டார். இதையடுத்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் சினிமாவில் இருந்து இரண்டு ஆண்டுகள் ஒதுங்கியிருந்தார். 

balakrishna

தற்போது கமலுடன் இணைந்து 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கவுள்ளார். பாலகிருஷ்ணாவின் 108வது படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

balakrishna

சமீபத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான 'வீர சிம்ஹா ரெட்டி' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் வசூல் சாதனை படைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Share this story