மகாலெட்சுமியாக மாறி தங்க காசுகளை பரிசாகவழங்கிய கீர்த்தி சுரேஷ்- மகிழ்ச்சியில் 'தசரா' குழுவினர்.

photo

முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் தான் நடித்து வரும் ‘தசரா’ படத்தின் படப்பிடிப்பு நிவுநாளில், ஒரு தரமான செயலை செய்துள்ளார். அதாவது அந்த படத்தில் பணிபிரிந்த அனைவருக்கும் தங்க நாணையத்தை பரிசாக வழங்கியுள்ளார்.

photo

தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்த கூர்த்தி சுரேஷ், ‘மகாநடி’ படத்திற்கு பிறகு முன்னணி நடிகையாக உயர்ந்தார், அப்படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழில் மாமன்னன், சைரன், ரிவால்டர் ரீட்டா, ரகுதாதா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் போலா ஷங்கர், தசரா அகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்து வருகிறார். இது அஜித் நடித்தவேதாளம்’ படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். மற்றொரு தெலுங்கு படமான தசராவின் நடிகர் நானிக்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தான் நிறைவடைந்தது

photo

படப்பிடிப்பு நிறைவு பெற்ற தினத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் , படத்தில் தன்னுடம் பணிபுரிந்த 130 நபர்களுக்கும்  தலா 2 கிராம் தங்க நாணையத்தை பரிசாக வழங்கியுள்ளார். கீர்த்தியின் இந்த செயல் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

Share this story