‘ரிவால்வர் ரீட்டா’... கீர்த்தி சுரேஷின் அடுத்த பட தலைப்பு அறிவிப்பு !

RevolverRita

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில்  உதயநிதியுடன் ‘மாமன்னன்’ படத்தை மட்டுமே கைவசம் வைத்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  

RevolverRita

தெலுங்கில் கடைசியாக ‘சார்காரு வாரி பட்டா’ படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு பெரியதாக எந்த படத்திலும் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகாமல் இருந்தார். இதற்கு காரணம்  விரைவில் கீர்த்தி சுரேஷ், தொழிலதிபர் ஒருவரை கரம்பிடிக்க உள்ளதாக கூறப்பட்டது. 

RevolverRita

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘ரிவால்வர் ரீட்டா’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தை சந்துரு என்பவர் இயக்கவுள்ளார். தி ரூட் மற்றும் பேஷன் ஸ்டுடியோ இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளனர். தற்போது இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 


 

Share this story