கீர்த்தி சனோனுடன் காதலா ?.. விளக்கமளித்த பிரபாஸ் !

prabhas
நடிகை கீர்த்தி சனோனுடன் காதலில் இருப்பதாக வந்த செய்திக்கு பிரபாஸ் விளக்கம் அளித்தார். 

தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நடிகராக இருக்கிறார் பிரபாஸ். ‘பாகுபலி’ படத்தின் பிரம்மாண்டத்திற்கு முழுக்க முழுக்க கிராபிக்ஸில் உருவாகும் ஆதிபுரூஷ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடிக்கிறார். 

prabhas

இதற்கிடையே பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் ஆகிய இருவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் ‘பேடியா’ படத்தின் ப்ரோமோஷன் விழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய நடிகர் தவான், கீர்த்தி சனோன் வேறொருவரின் இதயத்தில் உள்ளார். அந்த மனிதர் தற்போது தீபிகாவுடன் படப்பிடிப்பில் இருக்கிறார் என்று கூறினார். இது பிரபாஸ் - கீர்த்தி சனோன் காதலை உறுதிப்படுத்தும் விதமாக இருந்தது. அதனால் ஊடகங்கள் இவர்கள் காதலை உறுதிப்படுத்தும் விதமாக செய்திகளை வெளியிட்டன. 

prabhas

இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த நடிகை கீர்த்தி சனோன், தனது இன்டாகிராம் பக்கத்தில் புதிய விளக்கம் ஒன்றை கொடுத்தார். அதில்,  ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிடுகின்றன. அது காதலும் இல்லை. பப்ளிசிட்டியும் இல்லை. நிகழ்ச்சியில் வேடிக்கையாக பேசியதை ஊடகங்கள் பெரிதுப்படுத்திவிட்டன. ஏதாவது ஒரு இணையத்தளம் திருமண தேதியை அறிவிப்பதற்கு முன் நானே விளக்கம் கொடுக்கவேண்டும் என்பதற்காக இந்த பதிவை வெளியிட்டுள்ளேன். அனைத்து வதந்திகளும் ஆதாரமில்லாதவை என்று காட்டமாக பதிலளித்திருந்தார். 

இந்நிலையில் ஓடிடித்தளத்திற்காக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி ஒன்றை பிரபாஸ் பங்கேற்றார். அப்போது கீர்த்தி சனோனுடனான காதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரபாஸ், அது பழைய செய்தி, அதுபற்றி கீர்த்தி சனோனே விளக்கம் அளித்துவிட்டார் என்று கூறினார். இதனால் இந்த விவகாரத்திற்கு தற்போதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

 

 

Share this story