மம்மூட்டி - ஜோதிகா இணைந்து நடிக்கும் ‘காதல் தி கோர்’... ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

Kadal The Core

 மம்மூட்டி மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கும் ‘காதல் தி கோர்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

கடந்த 2021-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘தி கிரேட் இந்தியன்’. நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படத்தை ஜோ பேபி இயக்கினார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது மம்மூட்டி நடிப்பில் உருவாகும் ‘காதல் தி கோர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். 

mamooty

தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வந்தா ஜோதிகா, நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு மேத்யூ புலிகன் என்பவர் இசையமைத்து வருகிறார். மம்மூட்டி சொந்த நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. 

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள கோலஞ்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காதல் மையப்படுத்தி குடும்ப படமாக உருவாகும் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 

 

Share this story