மோகன்லாலுக்கு வில்லனாகும் ‘காந்தாரா’ ஹீரோ.. ‘மலைக்கோட்டை வாலிபன்’ புதிய அப்டேட்

mohanlal

 மோகன்லால் நடிக்கும் புதிய படத்தில் ‘காந்தாரா’ நடிகர் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் பிரபல இயக்குனரான லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மலைக்கோட்டை வாலிபன்’. இந்த படத்தில் மல்யுத்த வீரராக மோகன்லால் நடித்து வருகிறார். மல்யுத்தம் கதைக்களம் கொண்ட இப்படத்தை ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

mohanlal

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படம் மலையாளம் மற்றும் தமிழ் என இருமொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் கமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மராத்தி நடிகையான சோனாலி குல்கர்னி நடித்து வருகிறார். இவர்களுடன் ஜீவா, ஹரீஷ் பெரேடி, டேனிஷ் சேட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

mohanlal

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தல் ராஜஸ்தானில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க ‘காந்தாரா’ படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சூப்பர் ஹிட்டடித்த ‘காந்தாரா’ திரைப்படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி இப்படத்தில் இணைவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

Share this story