சிறந்த இயக்குநர் விருதை தட்டி தூக்கிய எஸ் எஸ் ராஜமௌலி – சினிமா என்பது கோவில் என நெகிழ்ச்சி.

photo

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்  நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ஹிட்டான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படம் 15 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு விண்ணப்பிக்கப்பட்டது. அதில் படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல்  சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில்  இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளதுவருகிற 24 ஆம் தேதி வின்னர் யார் என்பது தெரியவரும்.  

photo

 அந்த வகையில், நியூயார்க் பிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதில் சிறந்த இயக்குநருக்கான பிரிவில் ராஜமௌலி தேர்வாகியிருந்தார். இந்நிலையில், நியூயார்க் பிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருது விழா நடைபெற்றது. நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்த விருது விழாவில் தனது மனைவியுடன் கலந்து கொண்டு சிறந்த இயக்குநருக்கான விருதை ராஜமௌலி பெற்றார்.

photo

விருதை வாங்கிய ராஜமௌலிசினிமா என்பது கோயில் போன்றது. ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு இந்தியாவில் எப்படி வரவேற்பு இருந்ததோ, அதே வரவேற்பு மேற்கத்திய நாடுகளில் இருக்கிறது, அனைவருக்கும் நன்றி" என நெகிழ்ந்து பேசியுள்ளார், இது குறித்த புகைப்படங்கள், வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.


 

Share this story