நாகசைதன்யா நடிப்பில் ‘கஸ்டடி’... ரிலீஸ் தேதி அறிவிப்பு !

custody

 நாகசைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கஸ்டடி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னணி இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கஸ்டடி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

custody

இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் பிரேம்ஜி, சம்பத் குமார், சரத்குமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து வருகின்றனர். 

custody

சமீபத்தில் இப்படத்தின் மிரட்டலான ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு மே மாதம் 12-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

Share this story