தமிழில் வெளியாகிறது மம்மூட்டியின் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’.. எப்போது தெரியுமா ?

Mammootty

 மம்மூட்டியின் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிஸ்செரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நண்பகல் நேரத்துக்கு மயக்கம்’.  பீஷ்ம பருவம், புழு ஆகிய படங்களை தொடர்ந்து இந்த படத்தில் மம்மூட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். 

Mammootty

ரம்யா பாண்டியன், அசோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் இப்படத்தை மம்முட்டியின் சொந்த நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் பழனி பகுதியில் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகம் கிராமம் ஒன்றில் நடக்கும் விநோதமான விஷயத்தை வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கலையொட்டி மம்மூட்டி வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படம் வரும் ஜனவரி 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story