'கோல்டன் குளோப்' விருதை கைப்பற்றிய 'ஆர் ஆர் ஆர்' படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல்.
கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்த ஆர் ஆர் ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் தற்போது விருது வென்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்த பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய பாடல் என்ற பெருமையையும் இந்த பாடல் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமான முறையில் இன்று நடைபெற்றுது கோல்டன் குளோப் விருது விழா. இந்த விழாவில் ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் கலந்துகொண்டர். இயக்குநர் ராஜமௌலி, ராம்சரண், எம்.எம். கீரவாணி உள்பட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர். அந்த வகையில், இந்தாண்டுக்கான சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவுக்கான கோல்டன் குளோப் விருதை ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்’டு பாடல் கைப்பற்றியது.
And the GOLDEN GLOBE AWARD FOR BEST ORIGINAL SONG Goes to #NaatuNaatu #GoldenGlobes #GoldenGlobes2023 #RRRMovie
— RRR Movie (@RRRMovie) January 11, 2023
pic.twitter.com/CGnzbRfEPk
விருதை அறிவித்ததும் உற்சாகத்தில் கூச்சலிட்ட படக்குழு எழுந்து நின்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி விருதை பெற்றுக்கொண்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கல் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.