கோல்டன் குளோப் விருதை வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல்... உற்சாகத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழுவினர் !

nattu nattu

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு‘ பாடல் கோல்டன் குளோப் விருதை கைப்பற்றியுள்ளது. 

ஆஸ்கருக்கு பிறகு உலகில் மிக உயர்ந்த விருதாக கருதப்படுவது கோல்டன் குளோப். அதன் 80வது விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நேற்று நடைபெற்றது. இந்த விருது விழாவில் பல மொழி திரைப்படங்கள் பங்கேற்றன. அந்த வகையில் இந்திய மொழி படமான ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திலிருந்து ‘நாட்டு நாட்டு’ பாடல் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. 

nattu nattu

இந்நிலையில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது. இந்த பிரிவுக்கு ஐந்து பாடல்கள் இடம்பெற்ற நிலையில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. 

நாட்டு நாட்டு பாடலுக்கு பாடலுக்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்த நிலையில் அவரே அந்த விருதை வாங்கினார். இந்த வெற்றியை ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்த்தில் வெளியான இந்த படம் மொழிகளை கடந்த வெற்றிப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story